வீரமாமுனிவர் இயற்பெயர் கான்ஸ்டாண்சு ஜோசப் பெசுகி. இவரது பெற்றோர் கொண்டல் போபேஸ்கி மற்றும் எலிசபெத் ஆவார். இவர் பிறந்த ஊர் இத்தாலி நாட்டில் உள்ளகாஸ்தக்கிளியோன். இவர் கற்றரிந்த மொழிகள் இத்தாலியம், இலத்தீன், கிரேக்கியம், எபிரேயம், தமிழ், தெலுங்கு, சமஸ்கிருதம்
இவருக்கு தமிழ் கற்பித்தவர் மதுரை சுப்பிரதீபக் கவிராயர். இவர் 30ஆம் வயதில் தமிழகம் வந்து தமிழ் பயின்று காப்பியம் படைத்துள்ளார். இவரது நூல்கள் ஞானோபதேசம், பரமார்த்தக்குரு கதை, சதுரகராதி, திருக்காவலூர்க கலம்பகம், தேம்பவாணி, தொன்னூல் விளக்கம், இவரது காலம் 1680 – 1747
வீரமாமுனிவர் தொகுத்த சதுரகராதியே தமிழில் தோன்றி முதல் அகரமுதலி. இது கி.பி. 1732ஆம் ஆண்டு வெளிவந்து. சதுர் என்பதற்கு நான்கு பொருள். இந்நூலில் பெயர், பொருள், தொகை, தொடை என நான்கு வகைகளில் தனித்தனியாகப் பொருள் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
தேம்பவாணி, காவலூர்க் கலம்பகம் கதம்ப மாலையாகக் காட்சியளிக்கின்றது. தொன்னூல் பொன் நூலாக இலங்குகின்றது. சதுரகராதி முத்தாரமாக மிளிர்கின்றது. வீரமாமுனிவர் தமிழ் முனிவர்களுள் ஒருவராக விளங்குகின்றார் எனக் சொல்லின் சொல்வர் ரா.பி.சேதுபிள்ளை வீரமாமுனிவருக்கும் புகழாரம் சூட்டினார்.
தமிழைத் தாய்மொழி கொண்டிராதவர் வீரமாமுனிவர். ஆனல் நற்றமிழைக் கற்றுக் தமிழில் இலக்கண இலக்கியங்கள் இயற்றித் தமிழுக்கு மாபெரும் தொண்டாற்றியுள்ளார். இவர் ஆற்றிய தமிழ்த் தொண்டும் மாறாத் தமிழ்பற்றும் தமிழுள்ளவரை தமிழ் உள்ளங்களில் மணம் பரப்பிக் கொண்டிருக்கும்.
வீரமாமுனிவர் திருச்சியை ஆண்ட சந்தாசாகிப் என்னும் மன்னவரைச் சந்தித்து உரையாடுவதற்காக இரண்டே மாதங்களில் உருது மாெழியைக் கற்றுக் காெண்டார். இவருடைய எளிமையையும், துறவையும் கண்டு வியந்த சந்தாசாகிப் “இஸ்மத் சன்னியாசி” என்னும் பட்டத்தை வீரமாமுனிவருக்கு அளித்தார். இந்தப் பாரசீகச் சொல்லுக்குத் “தூய துறவி” என்று பாெருள்.