Versol Thervu Seithal – வேர்ச்சொல்லைத் தேர்வு செய்தல் பற்றிய குறிப்புகள் மற்றும் வினாக்கள்

வேர்ச்சொல்லைத் தேர்வு செய்தல் – Versol Thervu Seithal

TNPSC Tamil Notes - Versol Thervu Seithal - வேர்ச்சொல்லைத் தேர்வு செய்தல்

Group 4 Exams – Details

வேர்ச்சொல்லைப் பற்றி அறிவதற்கு முன் பகுபத உறுப்பிலக்கணங்களை பற்றி தெரிந்து கொள்வது நல்லது.

சொல்

ஓர் எழுத்து தனித்தேனும் ஒன்றுக்கு மேற்பட்ட எழுத்துக்கள் தொடர்ந்தேனும் ஒரு பொருளை உணர்த்துமானால் அது சொல் எனப்படும்.

பதம், மொழி, கிளவி என்பன சொல் என்பதன் வேறு பெயர்கள்.

பதம் பகாப்பதம், பகுபதம் என இருவகைப்படும்.

பகாப்பதம்

பிரித்தால் பொருள் தராத சொல் பகாப்பதம் எனப்படும்.

பெயர், வினை, இடை, உரி ஆகியவற்றின் அடிப்படையில் பகாப்பதம் நான்கு வகைப்படும்.

  • பெயர்ப்பகாப்பதம் – மரம், நாய், நீர்
  • வினைப்பகாப்பதம் – உண், காண், எடு
  • இடைப்பகாப்பதம் – தில், மன், பிற
  • உரிப்பகாப்பதம் – சால, நனி, கடி, உறு

(இடைச்சொல்லும், உரிச்சொல்லும் பகாப்பதங்களாகவே இருக்கும்)

பகாப்பதம்

பகுதி, விகுதி, இடைநிலை எனப் பிரிக்கப்படும் பதம் பகுபதம் எனப்படும்.

(பகுபதம் – பிரிக்கவியலும் பதம்). பகுபதம் பெயர்ப்பகுபதம், வினைப்பகுதி என இருவகைப்படும்

பெயர்ப்பகுபதம் : பொருள், இடம், காலம், சினை, குணம், தொழில் எனும் அடியாகத் தோன்றுவது பெயர்ப்பகுபதம் எனப்படும்

1. பொன்னன்

 

பொன் + ன் + அன் (ன் இரட்டித்தது)

பொன் என்னும் பொருட்பெயர் அடியாக பிறந்தது.

2. ஊரன் ஊர் + அன்ஊர் என்னும் இடப்பெயர் அடியாகப் பிறந்தது.
3. ஆதிரையான்

 

ஆதிரை + ய் +ஆன் (ய் – உடம்படுமெய்)

ஆதிரை என்னும் காலப்பெயர் அடியாகப் பிறந்தது.

4. கண்ணன்

 

கண் + ண் + ன் (ண் இரடித்தது)

கண் என்னும் சினைப்பெயர் அடியாகப் பிறந்தது.

5. கரியன்

 

கருமை + அன்

கருமை என்னும் பண்புப்பெயர் அடியாகப் பிறந்தது.

6. நடிகன்

 

நடி + க் + அன் (க் – பெயரிடைநிலை)

நடித்தல் என்னும் தொழில்பெயர் அடியாகப் பிறந்தது.

வினைப்பகுபதம் : பகுதி, விகுதி, இடைநிலை முதலியனவாகப் பகுக்கப்படும் வினைமுற்று வினைப்பகுபதம் எனப்படும்

செய்தான் = செய் + த் +ஆன்

செய்தான் என்னும் வினைமுற்றில் செய் என்னும் பகுதி தொழிலையும், ‘த்’ என்னும் இடைநிலை இறந்த காலத்தையும் ஆன் என்னும் விகுதி ஆண்பாலையும் குறிக்கின்றன.

பகுபத உறுப்புகள்

பகுதி, விகுதி, இடைநிலை, சந்தி, சாரியை, விகாரம் என்னும் ஆறு உறுப்புகளும் பகுபத உறுப்புகள் ஆகும்.

பகுதி

சொல்லின் முதலில் நிற்கும்; பகாப் பதமாக அமையும்; வினைச்சொல்லில்
ஏவலாகவும், பெயர்ச் சொல்லில் அறுவகைப் பெயராகவும் அமையும்.

  • படித்தான் – படி என்பது பகுதி
  • ஓடினான்- ஓடு என்பது பகுதி
  • வந்தான் – வா என்பது பகுதி

விகுதி

சொல்லின் இறுதியில் நின்று திணை, பால், எண், இடம் காட்டுவதாகவும் அமையும்.

படித்தான் ஆன் – ஆண்பால் வினைமுற்று விகுதி  அன், ஆன்
பாடுகிறாள் ஆள் – பெண்பால் வினைமுற்று விகுதி  அள், ஆள்
பெற்றார் ஆர் – பலர்பால் வினைமுற்று விகுதி  அர், ஆர்
நீந்தியது து – ஒன்றன்பால் வினைமுற்று விகுதி  து, று
ஓடின அ – பலவின்பால் வினைமுற்று விகுதி  அ, ஆ
சிரிக்கிறேன் ஏன் – தன்மை ஒருமை வினைமுற்று விகுதி என், ஏன்
உண்டோம் ஓம் – தன்மைப் பன்மை வினைமுற்று விகுதி அம், ஆம், எம், ஏம், ஓம்
செய்தாய் ஆய் – முன்னிலை ஒருமை வினைமுற்று விகுதி ஐ, ஆய், இ
பாரீர் ஈர் – முன்னிலைப் பன்மை வினைமுற்று விகுதி இர், ஈர்
அழகிய, பேசும் அ, உம் – பெயரெச்ச விகுதிகள்  அ, உம்
வந்து, தேடி  உ, இ – வினையெச்ச விகுதிகள் உ, இ
வளர்க க – வியங்கோள் வினைமுற்று விகுதி க, இய, இயர்
முளைத்தல் தல் – தொழிற்பெயர் விகுதி தல், அல், ஐ, கை, சி, பு

இடைநிலை

பகுதிக்கும் விகுதிக்கும் இடையில் நின்று காலம் காட்டும்.

வென்றார் ற்-இறந்தகால இடைநிலை த், ட், ற், இன்
உயர்கிறான் கிறு – நிகழ்கால இடைநிலை கிறு, கின்று, ஆநின்று
புகுவான், செய்கேன் வ், க் – எதிர்கால இடைநிலைகள் ப், வ், க்
பறிக்காதீர் ஆ – எதிர்மறை இடைநிலை இல், அல், ஆ
மகிழ்ச்சி, அறிஞன் ச், ஞ் – பெயர் இடைநிலைகள் ஞ், ந், வ், ச், த்

சந்தி

பகுதியையும் பிற உறுப்புகளையும் இணைக்கும்; பெரும்பாலும் பகுதிக்கும் இடைநிலைக்கும் இடையில் வரும்.

உறுத்தும் த் – சந்தி த், ப், க்
பொருந்திய ய் – உடம்படுமெய் சந்தி ய், வ்

சாரியை

பகுதி, விகுதி, இடைநிலைகளைச் சார்ந்து வரும்; பெரும்பாலும் இடைநிலைக்கும் விகுதிக்கும் இடையில் வரும்.

நடந்தனன் அன் – சாரியை அன், ஆன், இன், அல், அற்று, இற்று, அத்து, அம், தம், நம், நும், ஏ, அ, உ, ஐ, கு, ன்

விகாரம்

பகுதி விகுதி இடைநிலை ஆகியவை புணரும்போது அவற்றின் வடிவத்தில் ஏற்படும் மாற்றம், விகாரம் எனப்படும்.

தனி உறுப்பு அன்று; மேற்கண்ட பகுபத உறுப்புகளில் ஏற்படும் மாற்றம்.

வேர்ச்சொல்

இப்பகுதி வினாக்களை எளிதில் எதிர்கொள்ள வாக்கியங்களை பிரித்தெழுவதில் தேர்ச்சி பெற்றிருத்தல் அவசியம்.

ஒரு வார்த்தையில் வேர்ச்சொல்லை பிரிக்க முடியாது.

வேர்ச்சொல் என்பது பொதுவாக ஏவலாகவோ இருக்கும்

சொல் வேர்ச்சொல்
அகழந்தான் அகழ்
அகன்று அகல்
அடைந்தோம் அடை
அணிந்தான் அணி
அரிந்து அரி
அரியது அருமை
அறிந்தான் அறி
அடித்தாள் அடி
அலறள் அலறு
அருளினர் அருள்
அறுந்தது அறு
அறுவடை அறு
அவிந்ந்தது அவிழ்
அறியாது அறி
ஆண்டாள் ஆள்
ஆடினாள் ஆடு
ஆழந்தார் ஆழ்
இனிது இனிமை
இனிப்பு இனிமை
இயம்பியது இயம்பு
ஈந்தது
ஈன்றாள் ஈன்று
ஈட்டினான் ஈட்டு
உண்பார் உண்
உழுதான் உழு
உணவு உண்
உறங்கினான் உறங்கு
ஊர்ந்து ஊர்
உருக்கும் உருக்கு
உழுவித்தான் உழுவி
உள்ளம் உள்
உள்ளீடு உள்
எஞ்சிய எஞ்சு
எடுக்கும் எடு
எண்ணிய எண்
எய்தான் எய்
எடுத்தான் எடு
எழுந்தான் எழு
எழுதினான் எழுது
ஏத்துதல் ஏத்து
ஒட்டுதல் ஒட்டு
ஒழிந்தான் ஒழி
ஒட்டுவிப்பு ஒட்டுவி
ஒட்டியது ஓட்டு
ஓடாது ஓடு
ஓடினான் ஓடு
ஓதியவர் ஓதி
கற்க கல்
கடையல் கடை
கற்றேன் கல்
காட்சியில் காண்
காட்டியது காட்டு
கண்டு, கண்டனன் காண்
கற்றான் கல்
கடித்தான் கடி
காணாமை காண்
காட்டுவான் காட்டு
காத்தான் கா
காத்தவன் கா
காண்பார் காண்
கூவல் கூ
கேட்க, கேட்டல் கேள்
கொண்டான் கொள்
கொணர்ந்தான் கொணர்
கொன்றதை கொல்
கொடாமை கொள்
குரைத்தது குரை
குடித்தான் குடி
குளித்தான் குளி
கூறினான் கூறு
கொள்ளுதல் கொள்
கொன்றான் கொல்
கொய்தான் கொய்
சாய்ந்தது சாய்
சாற்றினான் சாற்று
சிரிப்பு சிரி
சரிந்தான் சிரி
சிரித்தான் சிரி
சிதறிய சிதறு
சீரிய சீர்மை
சீத்தாள் சீ
சுட்டது சுடு
சுருட்டினான் சுருட்டு
சூடினான் சூடு
சென்றாள் செல்
செல்வான் செல்
சேர்ந்தான் சேர்
சொன்னான் சொல்
செத்தவன் சா
செய்கிறாள் செய்
சென்றவன் செல்
சோர்வு சோர்
தந்தான் தா
தட்டுவான் தட்டு
தாண்டினான் தாண்டு
தட்பம் தண்மை
தாவியது தாவு
தாழ்வு தாழ்
திறந்தது திற
திருத்தினான் திருத்து
தீயந்தது தீய்
தீர்ந்த தீர்
துறவு துற
தூங்கின தூங்கு
துயின்றான் துயில்
துறந்தான் துற
தூங்கினார் தூங்கு
தெரிந்தனர் தெரிந்து
தெளிந்தான் தெளி
தேடினான் தேடு
தேற்றினான் தேற்று
தேடல் தேடு
தொழாது தொழு
தோல்வி தோல்
தைத்தான் தை
தொடுவாள் தொடு
தொங்கினான் தொங்கு
தொடர்ந்தாள் தொடர்
தோண்டினான் தோண்டு
தோன்றினான் தோன்று
தோற்றான் தோல்வி
நக்கார் நகு
நட்டான் நடு
நடித்தான் நட
நாடகம் நடி
நாட்டும் நாட்டு
நின்றார் நில்
நின்றோன் நில்
நீங்கி நீங்கு
நீண்ட நீள்
நுகர்ந்தது நுகர்
நெட்டினான் நெட்டு
நேர்ந்தது நேர்
நோக்கம் நோக்கு
நோக்கினான் நோக்கு
நாடிய நாடு
நீங்கி நீங்கு
பட்டான் படு
படித்தல் படு
படிபித்தான் படிப்பி
பருகுவான் பருகு
பழுத்தது பழு
பாய்ச்சல் பாய்
பார்த்தல் பார்
படுத்தான் படு
பறித்தான் பறி
பற்றினான் பற்று
பாழ்த்த பாழ்
பிணங்கினான் பிணங்கு
பிரித்தார் பிரி
புக்கம் புகு
புகழ்ந்தான் புகழ்
பூண்டான் பூண்
பூசுதல் பூசு
பூப்பு பூ
பொறாமை பொறு
பெற்றாள் பெறு
பொருந்தினான் பொருத்து
பொருந்தின பொருந்து
போனான் போ

 

Related Links பொருந்தாச் சொல்லைக் கண்டறிதல்

Group 4 Model Questions – Download

School Books – Download

TET Exam – Details

 

Leave a Comment