Vidaiketra vinavai Therntheduthal – விடைகேற்ற வினாவை தேர்ந்தெடுத்தல் பற்றிய செய்தி குறிப்புகள் மற்றும் வினாக்கள்

விடைகேற்ற வினாவை தேர்ந்தெடுத்தல் – Vidaiketra vinavai Therntheduthal

TNPSC Tamil Notes - Vidaiketra vinavai Therntheduthal - விடைகேற்ற வினாவை தேர்ந்தெடுத்தல்

Group 4 Exams – Details

இப்பகுதியில் வரும் வினாக்கள் விடை வடிவத்திலும் சில சமயங்களில் விடையாகவும் வருகின்றது. எனவே வினாக்களின் வகைகளையும் விடைகளின் வகைகளையும் அறிதல் அவசியம்.

அறுவகை வினாக்கள்

அறி வினா:-

தான் விடை அறிந்திருந்தும், அவ்விடை பிறருக்குத் தெரியுமா என்பதை அறியும் பொருட்டு வினவுவது.

எ.கா.

  • மாணவரிடம், ‘இந்தக் கவிதையின் பொருள் யாது?’ என்று ஆசிரியர் கேட்டல்.

அறியா வினா:-

தான் அறியாத ஒன்றை அறிந்து கொள்வதற்காக வினவுவது.

எ.கா.

  • ஆசிரியரிடம், ‘இந்தக் கவிதையின் பொருள் யாது?’ என்று மாணவர் கேட்டல்.

ஐய வினா:-

ஐய வினா ஐயம் நீங்கித் தெளிவு பெறுவதற்காகக் கேட்கப்படுவது.

எ.கா.

  • ‘இச்செயலைச் செய்தது மங்கையா? மணிமேகலையா?’ என வினவுதல்.

கொளல் வினா:-

தான் ஒரு பொருளை வாங்கிக் கொள்ளும் பொருட்டு வினவுவது.

எ.கா.

  • ஜெயகாந்தன் சிறுகதைகள் இருக்கிறதா?’ என்று நூலகரிடம் வினவுதல்.

கொடை வினா:-

பிறருக்கு ஒரு பொருளைக் கொடுத்து உதவும் பொருட்டு வினவுவது.

எ.கா.

  • பாரதிதாசனின் கவிதைகள் இருக்கிறதா?

ஏவல் வினா:-

ஒரு செயலைச் செய்யுமாறு ஏவுதற் பொருட்டு வினவுவது.

எ.கா.

  • தம்பி கடைக்குச் சென்று பழங்களா வாங்கி வருவாயா?
1. அங்கு நிற்பவர் ஆணா? பெண்ணா? ஐய வினா
2. நீ தேர்வுக்கு படித்துவிட்டாயா? ஏவல் வினா
3. உன்னனிடம் திருக்குறள் உள்ளதா? கொளல் விடை
4. உனக்கு சீருடை உள்ளதா? கொடை வினா
5. ஐம்பெருங்காப்பியங்கள் யாவை? அறி வினா
6. பொழுது புலர்ந்ததும் எழுந்திருக்கவில்லையா? ஏவல் வினா

 

அறிவு அறியாமை ஐயுறல் கொளல் கொடை ஏவல் தரும் வினா ஆறும் இழுக்கார்

– நன்னூல்,385

எண்வகை விடைகள்

சுட்டு விடை, மறை விடை, நேர் விடை, ஏவல் விடை, வினா எதிர் வினாதல் விடை, உற்றது உரைத்தல் விடை, உறுவது கூறல் விடை, இனமொழி விடை என்று விடை எட்டு வகைப்படும்.

முதல் மூன்று வகையும் நேரடி விடைகளாக இருப்பதால் வெளிப்படை விடைகள் எனவும் அடுத்த ஐந்து விடைகளும் குறிப்பாக இருப்பதால் குறிப்பு விடைகள் எனவும் கொள்ளலாம்.

சுட்டு விடை

சுட்டிக் கூறும் விடை

எ.கா.

  • ‘கடைத்தெரு எங்குள்ளது?’ என்ற வினாவிற்கு, ‘வலப்பக்கத்தில் உள்ளது’ எனக் கூறல்.

மறை விடை

மறுத்துக் கூறும் விடை

எ.கா.

  • ‘கடைக்குப் போவாயா?’ என்ற கேள்விக்குப் ‘போகமாட்டேன்’ என மறுத்துக் கூறல்.

நேர் விடை

உடன்பட்டுக் கூறும் விடை

எ.கா.

  • ‘கடைக்குப் போவாயா?’ என்ற கேள்விக்குப் ‘போவேன்’ என்று உடன்பட்டுக் கூறல்.

ஏவல் விடை

மாட்டேன் என்று மறுப்பதை ஏவுதலாகக் கூறும் விடை.

எ.கா.

  • இது செய்வாயா?” என்று வினவியபோது, “நீயே செய்”என்று ஏவிக் கூறுவது

வினா எதிர் வினாதல் விடை

வினாவிற்கு விடையாக இன்னொரு வினாவைக் கேட்பது.

எ.கா.

  • ‘என்னுடன் ஊருக்கு வருவாயா?’ என்ற வினாவிற்கு ‘வராமல் இருப்பேனா?’ என்று கூறுவது.

உற்றது உரைத்தல் விடை

வினாவிற்கு விடையாக ஏற்கெனவே நேர்ந்ததைக் கூறல்.

எ.கா.

  • ‘நீ விளையாடவில்லையா?’ என்ற வினாவிற்குக் ‘கால் வலிக்கிறது’ என்று உற்றதை உரைப்பது.

உறுவது கூறல் விடை

வினாவிற்கு விடையாக இனிமேல் நேர்வதைக் கூறல்.

எ.கா.

  • ‘நீ விளையாடவில்லையா?’ என்ற வினாவிற்குக் ‘கால் வலிக்கும்’ என்று உறுவதை உரைப்பது.

இனமொழி விடை

வினாவிற்கு விடையாக இனமான மற்றொன்றை விடையாகக் கூறல்.

எ.கா.

  • “உனக்குக் கதை எழுதத் தெரியுமா?” என்ற வினாவிற்குக் “கட்டுரை எழுதத் தெரியும்” என்று கூறுவது
1. பட்டுக்கோட்டைக்குச் செல்லும் வழி எது? ‘இது’ சுட்டு விடை
2. சமைக்க தெரியுமா? ‘தெரியாது’ மறை விடை
3. பாடுவாயா? ‘இது’ நேர் விடை
4. கவிதை எழுதுவாயா? ‘எழுதுவேன்’ இனமொழி விடை
5. இன்று மாலை விளையாடுவாயா? ‘உடல் வலிக்கிறது’ உற்றது உரைத்தல் விடை
6. நன்றி மறப்பாயா? ‘நான் நன்றி மறப்பேனா?’ வினா எதிர் வினாதல் விடை

 

“சுட்டு மறைநேர் ஏவல் வினாதல் உற்ற(து) உரைத்தல் உறுவது கூறல் இனமொழி எனும்எண் இறையுள் இறுதி நிலவிய ஐந்தும்அப் பொருண்மையின் நேர்ப”

– நன்னூல்,386

ஒலி வேறுபாடு

Related Links

Group 4 Model Questions – Download

School Books – Download

TET Exam – Details

Leave a Comment