தமிழகத்தில் 50 ஆயிரம் பேருக்கு திறன் பயிற்சி
தற்போதய சூழலில் கல்வி தகுதியை பொறுத்து தமிழகத்தில் வேலை வாய்ப்பு வழங்கப்பட்டு வருகிறது.
உதாரணமாக சமீபத்தில் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் 10906 கான்ஸ்டபிள் வேலைக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இப்படி கல்வி தகுதி அடிப்படையில் பெரும்வாரியான வேலைவாய்ப்பை அளிக்க முடியவில்லை.
எனவே இளைஞர்களுக்கு, அவர்களின் திறனை வளர்த்து அதன் மூலம் வேலைவாய்ப்பு அளிக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
வேலைவாய்ப்பு திண்டாட்டம்
கொரானா பாதிப்பு காரணமாக தற்போது மற்ற ஆண்டுகளை விட வேலைவாய்ப்பு திண்டாட்டம் அதிகரித்துள்ளது.
இந்நிலையில் தமிழக அரசு வேலையற்ற 50 ஆயிரம் பேருக்கு இணைய வழியில் வேலைவாய்ப்பு பயிற்சி வழங்க அமெரிக்க நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.
சத்துணவு அமைப்பாளர் வேலை – Click
மேம்படுத்தப்பட்ட இணையதளம்
பயிற்சி வழங்க தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தினால் இயக்கப்பட்டு வரும் இணையதளமான https://www.tnskill.tn.gov.in தற்போது ரூபாய் 2 கோடி மதிப்பில் மேம்படுத்தப்பட்டுள்ளது.
இந்த இணையதளம் வாயிலாக 40 க்கும் மேற்பட்ட பிரிவுகளில் பயிற்சி அளிக்கப்படுகிறது.
இந்த பயிற்சில் பங்கு பெற tnskill.tn.gov.in என்ற இணையதளம் சென்று தங்களை பதிவுசெய்து கொள்ளலாம்.