தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் இரணடாம் நிலை காவலர் தேர்வுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அதாவது, இரண்டாம் நிலை காவலர், இரண்டாம் நிலை சிறைக் காவலர் மற்றும் தீயணைப்பாளர் பதவிகளுக்கான பொதுத்தேர்வை அறிவித்துள்ளது.
தமிழ்நாடு போலீஸ் வேலை 2020
அனைவரும் எதிர்பார்த்த போலீஸ் கான்ஸ்டபிள் தேர்வுக்கான அறிவிப்பு இன்று காலை தினத்தந்தி நாளிதழில் வெளியிடப்பட்டது.
ஆணையம் | தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் |
பதவியின் பெயர் | Gr II Police Constables, Gr-II Jail Wardens, and Firemen |
காலிப்பணியிடங்கள் | 10906 |
விண்ணப்பிக்க தொடங்கும் நாள் | செப்டம்பர் 26, 2020 |
எழுத்து தேர்வு நடைபெறும் நாள் | டிசம்பர் 13, 2020 |
தேர்வு எழுதுவதற்கான தகுதிகள்
இந்த தேர்வை எழுத மூன்று முக்கிய தகுதிகள் தேவை. அவைகள்,
- கல்வி தகுதி
- வயது வரம்பு
- உடல் தகுதி
மேற்கண்ட மூன்று தகுதிகளை பின்வரும் பகுதியில் விரிவாக பார்ப்போம்.
கல்வி தகுதி
போலீஸ் கான்ஸ்டபிள் தேர்வுக்கு விண்ணப்பிக்க குறைந்தபட்சம் 10 ஆம் வகுப்பு முடித்திருக்க வேண்டும்.
வயது வரம்பு
வயது வரம்பை பொறுத்தவரையில் ஒவ்வொரு பிரிவினருக்கும் ஒவ்வொரு விதமாக இருக்கும்.
அதாவது குறைந்தபட்ச வயது அனைவருக்கும் 18. ஆனால் அதிகபட்ச வயதானது ஒவ்வொரு பிரிவினருக்கும் அரசின் இடஒதிக்கீட்டை பொறுத்து மாறுபடும்.
எடுத்துக்காட்டாக பொதுப்பிரிவினருக்கு குறைந்தபட்ச வயது 18, அதிகபட்ச வயது 24 மட்டுமே. ஆனால் மற்ற பிரிவினர்களுக்கு மாறுபடும். அவைகள்.,
உடல் தகுதி
கல்வி மற்றும் வயதை தொடர்ந்து நாம் முக்கியமாக பார்க்க வேண்டியது உடல் தகுதியே.
போலீஸ் வேலைக்கு உடல் தகுதி மிக முக்கிய ஒன்றாகும். அவை ஆண், பெண், திருநங்கை என்று மாறுபடும்,
அவற்றை கீழே காணலாம்.
உடல் தகுதியை பூர்த்தி செய்ய முடியாதவர்கள் Group – 4 தேர்வுக்கு முயற்சிக்கலாம்.
தேர்வு செய்யும் முறை
விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு மற்றும் உடல் தகுதித் தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர்.
எழுத்து தேர்வானது 80 மதிப்பெண்களுக்கும் உடல் தகுதித் தேர்வுவானது 20 மதிப்பெண்களுக்கும் நடத்தப்படும்.
கான்ஸ்டபிள் எழுத்து தேர்வு முறை
எழுத்து தேர்வானது இரண்டு பிரிவுகளை கொண்டது. ஒன்று பொதுஅறிவு மற்றொன்று உளவியல்.
எழுத்து தேர்வானது 1 மணி 20 நிமிடங்கள் நடைபெறும்.
பொது அறிவு | 50 மதிப்பெண்கள் |
உளவியல். | 30 மதிப்பெண்கள் |
பாடத்திட்டம்
எழுத்து தேர்வானது 10 ஆம் வகுப்பு தரத்தில் நடத்தப்படும். தேர்வானது கொள்குறிவினாக்கள் அடங்கியதாக இருக்கும். அதாவது ஒரு மதிப்பெண் வினாக்களாக இருக்கும்.
பாடத்திட்டங்களின் சிறு தலைப்புகளை கீழே காணலாம்
பகுதி-I பொது அறிவு
- தமிழ்
- ஆங்கிலம்
- கணிதம்
- பொதுஅறிவியல்
- இந்திய வரலாறு
- புவியியல்
- நடப்பு நிகழ்வுகள்
பகுதி-II உளவியல்
பாடத்திட்டம் பற்றிய முழுவிவரங்களை அறிய – இங்கே க்ளிக் செய்யவும்
Some Important Links
TNUSRB PC Old Papers / பழைய வினாத்தாள்கள் | TNUSRB PC Model Papers / மாதிரி வினாத்தாள்கள் |
அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDF – Download | TNUSRB PC Syllabus/ பாடத்திட்டம் |
3 thoughts on “தமிழ்நாடு போலீஸ் கான்ஸ்டபிள் தேர்வு 2020!!!”