மத்திய காவல் படை வேலை 2020
UPSC CAPF 2020: மத்திய காவல் படையில் காலியாக உள்ள 1 லட்சம் காலிப்பணியிடங்கள் விரைவில் நிரப்பப்பட உள்ளது.
மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் மத்திய காவல் படையில் ஆட்சேர்ப்பு விவரங்களுக்கான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என உள்ளத்துறை இணை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
மத்திய காவல் படை என்பது BSF, CRPF, CISF, ITBP மற்றும் SSB ஆகியவற்றின் ஒருங்கிணைந்த அமைப்பு ஆகும்.
காலிப்பணியிடங்கள்
காவல் படை பிரிவு | காலியிடங்கள் |
எல்லைப் பாதுகாப்பு படை | 2892 |
மத்திய ரிசர்வ் போலீஸ் படை | 26,506 |
மத்திய தொழில் பாதுகாப்பு படை | 23,906 |
எஸ்.எஸ்.பி | 18,643 |
இந்தோ திபத் படை | 5,784 |
அசாம் ரைபிள்ஸ் பிரிவு | 7,328 |
அறிவிப்பு எப்போது?
மேற்குறிப்பிட்ட காலிப்பணியிடங்களில் 60,210 காவலர் பணியிடங்களும், 2,534 சப்-இன்ஸ்பெக்டர் பணியிடங்களும் பணியாளர் தேர்வு வாரியம் மூலமாகவும்,
330 உதவி கமாடெண்ட் பதவிகளுக்கு மத்திய பணியாளர் தேர்வாணயம் மூலமும் தேர்வு செய்யும் பணி நடைபெற்று வருவதாக அமைச்சர் நித்தியானந்த ராய் தெரிவித்துள்ளார்.
இந்த ஆண்டு இறுதிக்குள் அறிவிப்பு வெளிவர அதிக வாய்ப்புள்ளது.
தமிழக இளைஞர்கள்!!!
தற்போது தமிழ்நாடு போலீஸ் கான்ஸ்டபிள் வேலைக்கு விண்ணப்பிக்க தயார் நிலையில் இருக்கும் தமிழக இளைஞர்கள்,
இந்த வாய்ப்பையும் பயன்படுத்திக் கொண்டால் எளிதில் வேலைவாய்ப்பு பெறலாம்.
1 thought on “மத்திய காவல் படையில் 1 லட்சம் காலிப்பணியிடங்கள்!!!”