உலக யானைகள் தினம் 2020
யானைகளை பாதுகாப்பது பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கத்துடன் 2012 ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்டு 12 ஆம் தேதி உலக யானைகள் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
வில்லியம் சாட்னர் என்பவர் யானைகள் பற்றி எடுத்த ‘Return To The Forest’ என்ற திரைப்படமானது 2012 ஆகஸ்ட் 12 வெளியானது.
இந்த படமானது யானைகளுக்கு காடுகள் எவ்வளவு முக்கியமானது என்பதை அழகா வெளிப்படுத்தியது. இந்தப்படம் பலருக்கு யானைகளின் பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தியது.
பாதுகாப்பு விழிப்புணர்வை ஏற்படுத்த இந்த படம் போதுமானது இருக்கும் என்று கருதி படம் வெளியான ஆகஸ்ட் 12 உலக யானைகள் தினமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது.